யாழில் மூன்று மாத நாய்க்குட்டியின் நக கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தினால் கீறியுள்ளது.
நகத்தினால் கீறி இரண்டு நாட்களின் பின்னர் நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் நாய்க்குட்டி நகத்தினால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற தவறி இருந்த குடும்பஸ்தர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நல குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.
இதையடுத்து அவரை குடும்பத்தினர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]