உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டிய இருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை, கந்தர் மடம் மகளிர் கல்லூரிக்கு அருகில் வைத்தே இவ் இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்சானந் அவர்களது ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 26 வயது மதிக்கதக்கவர்கள் என்றும்,அவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

