யாழ்ப்பாண மாவட்டம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (18-11-2022) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல், வீட்டில் உள்ளவர்கள் அணிந்திருந்த நகைகளை மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதில் ஒரு சோடி தோடு, மோதிரம் உள்ளிட்ட ஒரு பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.