நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால், அரசிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த மக்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றுகூட இன்றுவரை நிறைவேறவில்லை. மத்திய-மாநில அரசுகள், நெடுவாசல் மக்களின் வாழ்வாதாரத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றன. இதனால் மனம் வெறுத்துப்போன அந்தப் பகுதி மக்கள் ஒருமித்த குரலுடன், அடுத்தக்கட்டப் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.