மகாபாரதத்தை மையமாக கொண்டு மலையாள திரைப்பட எழுத்தாளர் எம்.டி.வாசு தேவன் நாயர் ‘ரண்டாமூழம்’ என்ற நாவல் எழுதி இருக்கிறார். இந்த நாவலை தழுவி மோகன்லால் நடிப்பில் ‘மகாபாரதம்’ பெயரில் படம் உருவாக உள்ளது. பாரதப் போரில் பெரும் பங்குவகித்த பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். பெரும் பொருட் செலவில் உருவாகும் இதில் முக்கிய வேடங்களில் அமிதாப்பச்சன், கமல், நாகார்ஜூனாவும் நடிக்க உள்ளனர். இப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
கேரளா மாநில இந்து அமைப்பு தலைவர் கே.பி.சசிகலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக் கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’ரண்டாமூழம் ஒரு கற்பனை கதை. மகாபாரதத்தை தவறாக சித்தரித்துள்ளனர். இந்த கதையை வைத்துக்கொண்டு மோகன்லால் நடிக்கும் படத்துக்கு மகாபாரதம் என பெயர் வைக்கக்கூடாது. வேண்டுமென்றால் ரண்டாமூழம் என புத்தகத்தின் பெயரையே வைத்துக்கொள்ளுங்கள். எதிர்ப்பை மீறி மகாபாரதம் என பெயரிட் டால் அப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யவிடமாட்டேன் என்பதை சவாலாக தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.