முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவருடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.