தன்னை கொலை செய்ய திட்டமிட்ட முக்கிய நபர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலர் பின்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சதி முயற்சியின் பின்னணி குறித்து விசாரணைகள் மூலம் முழுமையான தெரிய வந்துள்ளதாகவும், அதன்மூலம் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி ஆட்சியை மாற்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தன்மீதான கொலை முயற்சி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்களின் அடிப்படையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக மாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
தம்மை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட விடயத்துக்கு பின்னால் மற்றுமொரு முக்கியஸ்தரின் பெயர் உள்ளதென்று குறிப்பிட்ட அவர், விசாரணைகள் முடிவடையாத காரணத்தினால் அதனை வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.
அந்தப் பெயரை தெரிந்துக் கொண்டால் மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நேற்றிரவு நடந்த முக்கிய கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தனக்கு போட்டியானவர்களை காலி செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டம் திட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஜனாதிபதி, உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.