“அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவை இன்றுதான் இறுதியாக சந்திப்போம். இன்று தீர்வு இல்லையேல் மாற்றுவழியை சிந்திப்போம்“
இவ்வாறு அதிரடியாக அறிவித்துள்ளது ஐக்கிய தேசிய முன்னணி. அதன் பங்காளி கட்சி தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.ஐ.தே.முன்னணிக்கும், ஜனாதிபதிக்குமிடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. எனினும், இறுதிநேரத்தில் அந்த சந்திப்பை பிற்போட்டார் ஜனாதிபதி. இன்று இரவு 7 மணிக்கு அந்த சந்திப்பு நடக்கிறது.
இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதில்லையென்ற முடிவிலும் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார்.
இந்தநிலையில் இன்று காலையில் கூடிய ஐ.தே.முன்னணி தலைவர்கள், ரணில் விக்கிரமசிங்கதான் என உறுதிசெய்தனர். இந்த நிலையிலேயே இன்று ஐ.தே.முன்னணி தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.