பாகிஸ்தானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூஸைனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் மேற்படி பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது பாகிஸ்தானின் ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதரும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்நாட்டு ஜனாதிபதி மம்னூன் ஹூஸைன் விசேட வரவேற்பளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பில் இருநாடுகளினதும் பிராந்தியப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதி ஒருவர் முதற்தடவையாகக் கலந்து கொண்ட பாகிஸ்தானியக் குடியரசுதினம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.