முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு (The Catholic Expression) என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் நேற்று முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதல் தொடர்பில் நீதியை நிறைவேற்றும்போது பின்தள்ளப்பட்ட அடிப்படை விடயங்கள் குறித்து கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சிரந்த. ஆர். என்டனி அமரசிங்க தெரிவித்துள்ளார்.

