இரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேண்பிட்டி முதலான பொருளாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்களுக்காக இன்று திறக்கப்டவுள்ளது.
இந்த நிலையில், உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி, பொருளாதார மையங்களுக்கு செல்லுமாறு விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் எல்.எல்.அனில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.
மரக்கறி மற்றும் பழங்கள் என்பனவற்றை விநியோகிப்பதற்காக பொதுமக்களின் அவசியம் கருதி இந்த இரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேண்பிட்டி முதலான பொருளாதார மையங்களை, மொத்த விற்பனையாளர்களுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதுமானளவு மரக்கறிகளை வழங்குவதற்கு, தம்புள்ளை பொருளாதார மையம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.