இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆகக் காணப்படுகின்றது.
நேற்று எவரும் புதிதாக தொற்றுக்குள்ளாகவில்லை. அதேபோல் இன்றும் இதுவரை எவரும் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்படவில்லை.
இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 161 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 148 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

