இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் கலந்து கொள்ளாமல் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் நேற்று மீண்டும் தாயகம் திரும்பினார்.
கடந்த வருடம் தென்னாபரிக்கா சுற்றினை தொடர்ந்து சுமார் 18 மாதமாக விளையாடாமல் இருந்து மெத்திவ்ஸ் மீண்டும் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் களமிறங்கினார்.
கடந்த தினங்களில் இடம்பெற்ற போட்டிகளில் அவர் பந்து வீச்சில் ஈடுபடவில்லை.
இதன் காரணமாக , மீண்டும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் அவுஸ்திரேலியா சென்று மருத்துவர்களை சந்தித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் , மெத்திவ்ஸ் தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

