அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மெக்ஸிக்கோவை சென்றடைந்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு (இலங்கை, இந்திய நேரப்படி இன்று முற்பகல்) மெக்ஸிக்கோவின் தலைநகர் மெக்ஸிக்கோ சிற்றியில் வந்திறங்கினார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மெக்ஸிக்கோ ஜனாதிபதி அன்ட்ரேஸ் மனுவெல் லோபஸ் ஒப்ராடோர் ஆகியோருடன் வட அமெரிக்க உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்றும் நாளை நாளையும் பங்குபற்றவுள்ளார்.
அதேவேளை, மெக்ஸிக்கோ, அமெரிக்க, ஜனாதிபதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் போதைப்பொருள் கடத்தல், குடியேற்றவாசிகள் விவகாரம் ஆகியன முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.