மெக்ஸிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஆயுதக்குழுவொன்று நடத்திய தாக்குதலினால் 14 பேர் பலியானதுடன், 24 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
சிஹுவாஹுவா மாகாணத்தின் சிவுடான் ஜூவாரெஸ் (Ciudad Juarez on) நகரில் புத்தாண்டுத் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
கவசவாகனங்களில் வந்த ஆயுதபாணிகள் இத்தாக்குதலை நடத்தியதாக சிஹுவாஹுவா மாகாண அரச தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சிறைக்காவலர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 10 பேரும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பபட்டுள்ளது.