Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது

December 1, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது

Saudi Arabia's midfielder #10 Salem Al-Dawsari (L) kicks the ball as Mexico's midfielder #24 Luis Chavez (R) reacts during the Qatar 2022 World Cup Group C football match between Saudi Arabia and Mexico at the Lusail Stadium in Lusail, north of Doha on November 30, 2022. (Photo by PATRICIA DE MELO MOREIRA / AFP)

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் சி குழுவுக்கான தனது கடைசி லீக் போட்டியில் சவூதி அரேபியாவை 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் மெக்சிகோ வென்ற போதிலும் அவ்வணிக்கு 2ஆம் சுற்றில் விளையாடும் வாய்ப்பு அற்றுப்போனது.

போலந்தும் மெக்சிகோவும் சம புள்ளிகளைப் பெற்ற போதிலும் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் மெக்சிகோவுக்கு உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற நேரிட்டது.

போலந்தை 2 – 0 என ஆர்ஜன்டீனா வெற்றிகொண்ட அதேவேளை, லுசெய்ல் விளையாட்டரங்கில் சவூதி அரேபியாவுடனான போட்டியில் மெக்சிகோவும் அதே கோல் எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தது. இதனால் 2ஆம் சுற்றுக்கு செல்ல மெக்சிகோவுக்கு மேலும் ஒரு கோல் தேவைப்பட்டதுடன் போட்டியில் உபாதையீடு நேரத்தில் 3 நிமிடங்களே எஞ்சியிருந்தது.

ஆனால், உபாதையீடு நேரத்தில் (90+5 நிமிடம்) சவூதி அரேபியா கோல் ஒன்றைப் போட்டதால் மெக்சிகோவின் இறுதிச் சுற்று வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்டது.

அப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடப்படாதபோதிலும் இரண்டு அணிகளும் சில வாய்ப்புகளைத் தவறவிட்டன.

சவூதி அரேபியாவை விட மெக்சிகோ கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

போட்டி ஆரம்பித்து 3ஆவது நிமிடத்திலும் முதலாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியிலும் 3 கோல் போடும் வாய்ப்புகளை மெக்சிகோ தவறவிட்டது.

அதேவேளை, சவூதி அரேபியாவும் 2 வாய்ப்புகளைக் கோட்டை விட்டது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2ஆம் சுற்றுக்குள் நுழையக்கூடியதாக இருக்கும் என போட்டிக்கு முன்னர் இரண்டு அணிகளும் அறிந்திருந்ததால் வெற்றிக்காக இரண்டு அணிகளும் கடுமையாக போராடின.

இடைவேளைக்குப் பின்னர் போட்டியின் 47ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி மெக்சிகோ சார்பாக ஹென்றி மார்ட்டின் முதலாவது கோலைப் போட்டார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து லூயிஸ் சாவெஸ் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் போட்டார்.

30 யார் தூரத்திலிருந்த கிடைக்கப்பெற்ற ப்றீ கிக்கை தடுப்பு சுவருக்கு மேலாக வளைந்து செல்லும் வகையில் சாவெஸ் உதைத்த பந்தை தடுக்க கோல்காப்பாளர் அல் உவைய்ஸ் முயற்சித்தபோதிலும் பந்து அவரைக் கடந்து கொலினுள் புகுந்தது.

அதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை அதிகரிக்க மெக்சிகோ கடுமையாக முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சிகள் சவூதி அரேபியாவில் தடுக்கப்பட்டது.

போட்டியின் 73ஆவது நிமிடத்தில் சாவெஸ் மீண்டும் ஒரு ப்றீ கிக் மூலம் கோல் போட எடுத்த முயற்சியை அல் உவைஸ் தனது கையால் தட்டி தடுத்தார்.

உபாதையீடு நேரத்திற்குள் போட்டிக்கு சென்று 4ஆவது நிமிடத்தைத் தொட்டபோது மற்றைய போட்டியில் ஆர்ஜன்டீனா 2 – 0 என வெற்றிபெற்றிருந்தது.

இதன் காரணமாக மெக்சிகோ 2ஆம் சுற்றுக்கு தகுதிபெற மேலும் ஒரு கோலைப் பெறவேண்டியிருந்தது. ஆனால், 90+5ஆவது நிமிடத்தில் பாஹ்ப்ரியுடன் இரட்டைப் பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்ட சலிம் அல்-தவ்சாரி மிகவும் அலாதியான கோல் ஒன்றைப் போட மெக்சிகோவின் இரண்டாம் சுற்று வாய்ப்பு பறிபோனது.

Previous Post

பேலியகொடையில் ஆணின் சடலம் மீட்பு

Next Post

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

Next Post
சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures