கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள சில பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் பல்மடுல்ல, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகங்களுக்குள் காணப்படும் பகுதிகளுக்கும், நுவரெலிய மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகத்துக்குள் காணப்படும் பகுதிகளுக்கும் கம்பஹா மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளுக்கும் இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கைநேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் நாட்களில் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
