உயர் தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உறவினர்களால் காப்பற்றப்பட்ட மாணவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் தப்பியுள்ளார்.
வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணவி தனது பெறுபேற்றை நேற்று முன்தினம் காலை பார்வையிட்டுள்ளார்.
மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த போதும், அவர் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை.
இதனால் ஏற்பட்ட மனவிரக்தி காரணமாக இந்த முடிவினை எடுத்துள்ளார். அவரது உறவினர்கள் அவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றதை உறுதிப்படுத்திய வல்வெட்டித்துறை பொலிஸார் இது தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள்.

