தெலுங்கானாவில் மூன்று கால்களுடன் பிறந்த குழந்தையின், மூன்றாவது காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கியுள்ளனர்.
தெலுங்கானாவின் Jangaon மாவட்டத்தைச் சேர்ந்தவர் Srilatha Kanchanapally(25). இவருக்கு கடந்த 21 ஆம் திகதி மூன்று கால்களுடன் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அக்குழந்தையின் மூன்றாவது கால் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஸ்கேன் செய்து பார்த்த போதே குழந்தைக்கு மூன்றாவதாக கால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனிவே குழந்தை பிறந்தவுடன் அதை அகற்ற முடிவு செய்தோம், அதன்படி தற்போது வெற்றிகரமாக நீக்கப்பட்டுவிட்டது. குழந்தையும் ஆரோக்கியமுடன் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வு 100,000 பிறப்புகளில் ஒருமுறை நிகழும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சை மூன்று மணி நேரத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து குழந்தையின் தாய் Srilatha கூறுகையில், எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் தான் என்று உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதே போன்று தான் கடந்த மாதம் குழந்தையொன்று நான்கு கால்களுடன் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.