களுத்துறை மாவட்டத்தில் 125 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் சிங்கள – முஸ்லிம் ஒற்றுமைக்காக பங்களிப்புச்செய்ய, தூர நோக்குடன் செயற்பட வேண்டுமென மர்ஜான் ஹாஜியார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
இன்னும் சில வாரங்களில், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே எமது விருப்பமாகும். முஸ்லிம் சமூகமும் அதனையே விரும்புகின்றது.
களுத்துறை மாவட்டமும், பேருவளைத் தொகுதியும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் பரந்துவாழும் பகுதியாகும், மிகுந்த திட்டமிடலுடன் செயற்பட்டால் இப்பிரதேசத்திலிருந்து ஓரு முஸ்லிம் உறுப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
ஆட்சியில் கோத்தபய, மஹிந்த சகோதரர்கள் அமர்ந்திருக்கையில் நான் பொதுஜன பெரமுனவில் போட்டியிட எதிர்பார்த்துள்ளேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுமிடத்து அது முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக அமைவதுடன் சிங்கள – முஸ்லிம் உறவுக்கும் பாலமாக அமையும்.
எனவே இதனைக் கருத்திற்குகொல்டு, முஸ்லிம் சமூகம் எதிர்வரும் தேர்தலை தக்கமுறையில் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது என்றார்.
