Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக என்னைவிட, அதிகமாக பேசிய ஒருவரை காட்டுங்கள்

March 9, 2020
in News, Politics, World
0
முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக என்னைவிட, அதிகமாக பேசிய ஒருவரை காட்டுங்கள்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்து, இரகசிய இடத்தில் வைக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்தும் வெளியில் சுதந்திரமாக இருப்பார்களாயின், அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்,

“தேரர்களாகிய நாங்கள் துரவறம் செல்லும்போது எங்களின் முடி மட்டும் தான் வெட்டப்படுமே ஒழிய, எங்களின் உரிமைகள் கிடையாது.

இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் தேரர்களின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாம் அரசியலுக்கு வரவேண்டுமா, இல்லையா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மகாநாயக்க தேரர்கள் கூட இது தொடர்பாக எமக்கு கூறத்தேவையில்லை.

இன்று இது தொடர்பாக சமூகத்தில் பிழையானதொரு புரிதல் இருக்கிறது. இது பிழையானது என்று தான் நாம் கூறவேண்டும்.

முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக என்னை விட அதிகமாக பேசிய ஒருவரை யாராலும் காண்பிக்க முடியுமா?- இல்லை.

எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலு எமது செயற்பாடுகளை நாம் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.

முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வழங்கிய எமக்கு எதிராக கடந்த காலங்களில் சட்டம் செயற்பட்டது.

ஆனால், தீவிரவாதத்திற்கு துணை செய்தவர்கள், கொலைகாரர்களுக்கு எதிராக எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை.

சரியாக இருப்பின், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்து, இரகசிய இடத்தில் வைக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்தும் வெளியில் சுதந்திரமாக இருப்பார்களாயின், அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள்.” எனக் குறிப்பிட்டார்.

Previous Post

எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமை

Next Post

ரவி கருணாநாயக்கவின் கைது நடவடிக்கை, நாடகமாக இருக்கலாம்

Next Post
ரவி கருணாநாயக்கவின் கைது நடவடிக்கை, நாடகமாக இருக்கலாம்

ரவி கருணாநாயக்கவின் கைது நடவடிக்கை, நாடகமாக இருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures