கனடாவின் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிறுவியதற்காக பிரம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பதாகை தற்போது முல்லைத்தீவு காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஒன்ராறியோவின் பிரம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பபட்டமைக்கு இலங்கை அரசாங்கம் உட்பட அரசியல்வாதிகளும் தங்களது கடுமையான ஆட்சேபனைகளை வெளியிட்டிருந்தனர்.
அரசாங்கத்தின் கண்டனம்
இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அதன்போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகரை நேரில் அழைத்து இவை ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் என தெரிவித்து கனடாவில் நினைவுச்சின்னம் நிறுவுவது குறித்து அரசாங்கத்தின் கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார்.