Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம்.

June 8, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம்.

இலங்கையின் தற்போதைய நிலைமையில் அனைத்து விவசாயா உற்பத்திகளையும்அதிகரிக்க வேண்டிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் /மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முல்லைத்தீவு தெற்கு (கரைச்சிகுடியிருப்பு) கிராமத்தில் அமைந்துள்ள பூர்வீக விவசாய காணிகளை சர்வதேச விளையாட்டு மைதானம் எனும் பொய்யான பெயரில் அபகரிப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க சிங்கள பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைபெறுகின்றதா என கேழ்வியை எழுப்பியுள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) முக்கியஸ்தர் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

முல்லைத்தீவுக்கு மாவட்டத்திற்கு சர்வதேச விளையாட்டு மைதானம் என்று ஒன்றும் இல்லை. 2016 ஆண்டு மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு என அரச காணியும் மக்களுக்கு உரித்தான கனிகளை மக்களின் விருப்பத்தின் படி முள்ளிவாய்க்கால் கிழக்கு ( வட்டுவாகல் ) கிராமத்தில் ஒத்துக்கப்பட்டது.

தற்பொழுது போலியாக சர்வதேச விளையாட்டு மைதானம் எனும்பெயரில் மக்களுக்கு சொந்தமான பூர்வீக விவசாயா காணிகளை காணி உரிமையாளர்களின் விருப்பத்தை அறியாது ” சர்வதேச விளையாட்டு மைதானத்துக்கு ஒத்துக்கப்பட்டுள்ள இடம்” என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் / மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் அறிவுறுத்தலில் சிறி ரெலோ கட்சிசார்பில் சுயேட்சையாக மெழுகுதிரி சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தவராசா சசிரோகன் ( பெரியதம்பி ) தலைமையில் பெயர் பலகை ஒன்றை பொது மக்களின் பூர்வீக விவசாய காணியில் நாட்டியிருப்பது கேலிக்குரிய விடையம் என்பதுடன் தேர்தல் சட்டத்துக்கு மீறிய செயலும் ஆகும் எனவும்

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அவர்கள் சிறி ரெலோ கட்சியின் அல்லது வேட்பாளர் சசிரோகன் அவர்களின் தேர்தல் முகவரா..? அல்லது முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரா எனவும் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது கடந்த மார்ச் 02 திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்பு அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்கள் சமர்ப்பித்திருக்கும் நிலையில் வேட்பாளர் அடங்கிய அந்த குழு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் / மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பொதுமக்களின் காணியில் பெயர் பலகை நாட்டியமை சட்டத்துக்கு முரனானது. தேர்தல் நடைபெறும் போது மாவட்ட செயலாளர் அவர்களே மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலராக பணிபுரிவார். அவர் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது வேடப்பாளர்களையோ ஊக்கிவித்தோ அல்லது வேடப்பாளர்களுடன் பொது நிகழ்விலோ வேறு எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாது.

ஒருகாணியை சுபிகரிப்பதுக்கோ அல்லது அதை அடையாளபடுத்தவோ அல்லது அதை மீள பெறும் அனைத்து அடிப்படை அதிகாரமும் பிரதேச செயலாளர் அவர்களுக்கே உண்டு.

ஒரு அரசு காணியை அந்த கிராம பொது அமைப்புக்கள், கிராம சேவகர், காணி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் முன்னிலையிலே அடையாள படுத்த முடியும்.
அதே போல் மக்களுக்கு வழங்கப்பட்ட பொது மக்களின் கருத்துக்கும் கால அவகாசம் வழங்கபடவேண்டும். தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளர் முன்னிலையிலோ அல்லது வேட்பாளரின் விருப்பத்துக்கோ காணியை பகிர்ந்தலிக்க முடியாது. அதேபோல் பிரதேச செயலாளர் அவர்களுக்கு அறிவித்தல் எதுவும் இன்றி மாவட்ட செயலாளர் காணியை சுபிகரிக்க முடியாது.

ஆனால் வன்னி மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் சிறி ரெலோ கட்சியின்சார்பில் சுயேட்சையாக மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தவராசா சசிரோகன் தலைமையில் போலி பெயரினிலே சர்வதேச விளையாட்டு மைதானத்துக்கு காணி ஒதுக்கப்பட்டுள்ளது என பொது மக்களின் காணியில் பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது. இவ் செயலானது ஒரு நபரின் காணிக்குள் அத்திமீறி அடாத்தாக பிடிப்பதுக்கு சமனாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச மைதானம் அமைக்க எந்த ஒரு நிதியும் ஒதுக்க படவில்லை. முள்ளிவாய்க்கால் கிழக்கில் (வட்டுவாகல்) ஒத்துக்கப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்கிற்கே முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரின் அயராத உழைப்பினால் 2019 ஆண்டு 35 மில்லியன் பணம் ஒத்துக்கப்பட்டது. தீடீர் என ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் புதிய அரசு அந்த பணத்தை விடுவிக்கவில்லை என்பதே உண்மை. இப்போது 50 மில்லியன் ஒத்துக்கப்பட்டுள்ளதாக போலி வதந்திகள் பரவுகின்றது. 50 மில்லியன் ஒதுக்கப்பட்டதை நிரூபிக்க முடியுமா.? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு நகரில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த செயற்பாட்டை கண்டித்து வருவதுடன். நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்க உள்ளார்கள் என அறிய முடிகின்றது.

அதே நேரம் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியதின் சிறி ரெலோ கட்சியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் பெயரை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது. எனவும் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் தெருவித்தார்.

Previous Post

கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடப்பட்டது

Next Post

கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் – சஜித் அதிரடி அறிவிப்பு

Next Post

கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் - சஜித் அதிரடி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures