முல்லைத்தீவில் காடையர்களால் எரிக்கப்பட்டன தமிழர்களின் கடற்தொழில் வளங்கள்.
நேற்று மாலை (13) முல்லைத்தீவின் நாயாறு பகுதியில் கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தலில் ஈடுபட சிங்கள மீனவர்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் , அதனைக் கண்டறிந்த தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னர் நேற்றிரவு (13) 11.00 மணியளவில் தமிழ் மீனவர்களின் 8 வாடிகள், 1 படகு, 3 எஞ்சின்கள் மற்றும் லட்சக்கணக்கான பெறுமதியுடைய வலைகள் என்பன எரிக்கப்பட்டிருக்கின்றன.
பொலிஸாரும், இராணுவமும் தமிழ் மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
