பொலனறுவை படைமுகாமில் பணியாற்றி வீடு திரும்பிய இளைஞர், கேப்பாபிலவு பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.
செந்தூரன் (வயது-–28) என்ற இளைஞனே தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேப்பாபிலவைச் சேர்ந்த இளைஞன் பொலனறுவை இராணுவ முகாமில் பணியாற்றி வருகின்றார். விடுமுறையில் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.வற்றாப்பளை – கேப்பாபிலவு வீதியில் வைத்து, இனந்தெரியாதோர் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

