Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முறைப்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் மின்சார பாவனையாளர்களுக்கு இணையம்!!

June 1, 2020
in News, Politics, World
0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களின் நலன்கருதி முறைப்பாடுகளை, பெற்றுக் கொள்ளவும், சேவையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இணையம் (online) வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் மின்சார பாவனையாளர்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக, இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாவனையாளர்கள் மற்றும் பிற சேவை பயனாளர்களை ஒன்லைன் (இணைய சேவை) மூலமாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

குழுவின் அலுவலகத்திற்குச் செல்லாமல் தங்கள் முறைப்பாடுகளை தீர்க்க மின்சார பாவனையாளர்களுக்கு இணைய மூலமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மின்சார பாவனையாளர்களின் தீர்க்கப்படாத முறைப்பாடுகளை பின்வரும் வழிகளில் ஆணைகுழுவிற்கு சமர்ப்பிக்கலாம்.

வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 0112 392 607 அல்லது 0112392608 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

0770126253 வாட்ஸ்எப் (whatsapp), வைபர் (viber) மற்றும் இமோ (IMO) மூலம், www.pucsl.gov.lk என்ற இணையதளத்தின் மூலம், [email protected] மின்னஞ்சல் மூலம், www.facebook.com/pucsl எனும் முகநூல் (Facebook) மூலமாக மின்சார கைத்தொழில் மற்றும் மசகு எண்ணெய் சந்தை ஒழுங்குறுத்துகையுடன் தொடர்புடைய பங்குதாரர்கள்தங்கள் சேவைகளுக்கு, 0770126250 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையை பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு அதிகாரியை சந்திப்பதற்கான அவசியம் காணப்படும் பட்சத்தில் அதற்கான தினத்தையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதற்கும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0112392607 மற்றும் 0112392608 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

இன்றேல் [email protected] அல்லது www.facebook.com/pucsl என்ற முகநூல் பக்கத்தினூடாக தொடர்புகொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.

உங்களது வேண்டுகோளுக்கு இணங்க பணியாற்றும் பிரிவினர் உங்களை சந்திப்பதற்கான நேரம் குறித்து விரைவில் அறியத்தருவர். இன்றேல் இணைய சேவை ஊடாக தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் 0772943193 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Previous Post

பாகிஸ்தானில் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை

Next Post

திருகோணமலை விபத்தில் சிப்பாய் பலி!

Next Post

திருகோணமலை விபத்தில் சிப்பாய் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures