அனைத்து முப்படையினரதும் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றினால் முப்படையினரும் பாதிக்கப்படும் அபாயமேற்பட்டுள்ளதால், உடனடியாக அனைத்து விடுமுறைகளையும் இரத்து செய்வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் தமது முகாம்களிற்கு உடன் திரும்ப அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

