மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 வது நினைவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது.
இவரது நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளனர்.
1993 ஆம் ஆண்டு ஐ.தே.க.யின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கொழும்பு ஆமர் வீதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.