முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது கைதுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ராஜித்த சேனாரத்னவை தேடி குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று பல இடங்களில் சோதனைகள் மேற்கொண்டிருந்தனர்.
இதற்கமைய கொழும்பில் உள்ள அவரின் இல்லத்திற்கு சி.ஐ.டியினர் இன்று பகல் சென்ற போதிலும் அவர் அங்கிருக்கவில்லை.
அத்துடன், களுத்துறையில் உள்ள அவரது மற்றுமொரு வீட்டிலும் பொலிஸார் இன்று சோதனை செய்துள்ளனர்.
இதனிடையே, திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக ராஜித சேனாரத்ன தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் சில தினங்களில் ராஜித சேனாரத்ன கைது செய்யப்படலாம் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

