தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவை (Asoka Ranwala) கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அசோக ரன்வல நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிடியாணை உத்தரவு
இதனைக் கருத்திற் கொண்ட மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க அசோக ரன்வலவுக்கு இவ்வாறு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதனையடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அசோக ரன்வல மறுநாள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

