இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வக்கீல் ஒருவர் அரியானா போலீசில் புகார் அளித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுஸ்வேந்திர சாகலுடன் பேசிய போது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வக்கீல் ஒருவர் அரியானா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மணி நேரத்தில் அவர் ஜாமினில் விடுதலையானார். முன்னதாக தனது பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]