குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் சலினி பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நண்பகல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

