‘மெர்சல்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் சந்தித்துப் பேசினார்.
அக்டோபர் 18-ம் தேதி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்துக்கு விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் வெளியீட்டுக்கு சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனிருந்தார்.
இதில், திரையரங்கு கட்டண உயர்வு, கேளிக்கை வரி குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக முதல்வரை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்ததாக அவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.













