வடமாகாண சபையின்அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் நேற்று நடைபெற்றது.
இதன்போது பல்வேறுவிடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்துகருத்து வெளியிடுகையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின்வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயார் எனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான்இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித்தலைவர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தின்போது கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இதில் கட்சிகளுக்கிடையிலானஆசனப் பங்கீடுகளில் இறுதி நேரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளும் தேர்தல் பின்னடைவுக்கானகாரணங்களில் ஒன்றாக எடுத்துக் கூறப்பட்டிருந்தது.
எனவே அடுத்துவரும் தேர்தல்களில் வேட்பாளர்கள் மற்றும் ஆசனங்கள் என்பன தொடர்பில் முன்னதாகவே முடிவுகளைஎடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக தன்னை போட்டியிடக் கோரினால் அதனைப் பரிசீலிக்கலாம்என ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு கோரப்படும்போது அது தொடர்பில் முடிவெடுப்பதுடன் அந்த முடிவானது கடந்த காலங்களில் இழைத்த தவறைப்போன்றதாக இருக்காது எனவும் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை இவ்வாறுஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளபோதிலும் இது தொடர்பாக எந்த வித இறுதி முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.