கைதடி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாதவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்தை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தினர். வாகனத்தைத் தீயிட முயன்றபோது வீட்டிலிருந்தவர்கள் சுதாரித்துக் குரல் எழுப்பியதை அடுத்து அவர்கள் தப்பியோடினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.
4 மோட்டார் சைக்கிளில் முகங்களை மறைத்தவாறு வந்தவர்களே தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

