உடனடியாக முகக் கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைகளில் முகக் கவசங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை, சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி, டொக்டர் கமல் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முகக் கவசங்களை விரைவாகத் தயாரிக்குமாறும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

