நாடாளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
இன்று காலை 10.30 மணிக்கு கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நாடாளுமன்றத்தை பிற்போடுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.