எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்திய ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதாமாதம், நிலைமையை ஆய்வு செய்து, அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கிறோம். நாட்கள் மாதங்கள் வேகமாக நகர்கின்றன. அதனால் அடுத்த வாரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாரம்.
பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன.” “ஏப்ரல் மீண்டும் ஒரு பண்டிகை காலம் வருகிறது, எனவே நாம் தற்போதே அது குறித்து கவனம் செலுத்தி சுகாதார பழக்கங்களுடன் செயற்படுத்தல் கட்டாயமாகும்.
“பிப்ரவரி 1ம் திகதி நாட்டை மூடுவது குறிது எமக்கு இப்போது கணிக்க முடியாது.” “வைரஸின் தாக்கம் குறித்து நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். ஆனால் கணிப்பது எங்களுக்கு மிகவும் கடினம்.
புதிய பிறழ்வு வந்தாலும், முகக்கவசத்தை அணிந்திருந்தால் பரவாது. “இன்னொரு விடயம் என்னவென்றால், நாடு இயல்பு நிலைக்கு வரவில்லை, புதிய பொதுமைப்படுத்தலுக்குதான் நாம் சென்றுள்ளோம்.”
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]