அசுரவதம், 7 படங்களுக்குப்பிறகு தமிழில் படங்கள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அட்டகத்தி நந்திதா. இந்தநிலையில், மீண்டும் அவர் தமிழுக்கு வரும் அவர் சிபிராஜ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை சிபிராஜ் நடித்த நாணயம், நாய்கள் ஜாக்கிரதை மற்றும் மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி செளந்திரராஜன் இயக்குகிறார். ஏற்கனவே தனது மகன் சிபிராஜூ டன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள சத்யராஜூம் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
திகில் கதையில் உருவாகும் இப்படத்தில் சிபிராஜ்க்கு ஜோடியாக ஒரு நிருபர் வேடத்தில் நடிக்கிறார் நந்திதா. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது.

