முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மின் மினி என்று பெயர் வைத்துள்ளனர் விஷ்னுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக விஷ்னு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது. மின் மினி படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘கதாநாயகன்’, ‘பொன் ஒன்று கண்டேன் இரு படங்களில் தற்போது விஷ்னு விஷால் நடித்து வருகிறார்.