காட்டு யானைகளுக்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளை – ஹல்துமுல்லை பகுதியில் இன்று புதன்கிழமை (16) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் மின்சார வேலியில் தவறுதலாக சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹல்துமுல்லை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.