யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 13 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் இடத்திலுள்ள தென்னத்தோப்பிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்கச் சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக், முஹம்மட் இப்றாஹிம் என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]