வவுனியா மாவட்ட மா.ச. உறுப்பினரும் வ.மா. முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியின் பலனாக நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கற்குளம் கிராமத்தின் உள்ளகவீதிகள் பனரமைப்புபணிகள் நேற்று 29.08.2018 வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.
மா.ச.உறுப்பினர் மருத்துவர்சத்தியலிங்கம்,ஆசிகுளம் வட்டார பிரதேசசபையின் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் உத்தரியநாதன், இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா தெற்குதமிழ் பிரதேசத்தலைவர் தாவீதுசீலன் ஆகியோர் புனரமைப்புபணிகளை நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.
குடியேற்றக்கிராமமான இந்தக் கிராமத்தின் உள்ளக வீதிகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமை தொடர்பில் மா.ச உறுப்பினரின் கவனத்திற்கு பொது அமைப்புகளால் கொண்டுவரப்பட்டதையடுத்து மாகாணசபை உறுப்பினர் நான்கு மில்லியன் ரூபா வீதி புனரமைப்பு வேலைகளுக்காக பிரதேசசபையினூடாக பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

