இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக மாலைதீவு ஜனாதிபதி சற்று முன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
அந்தவகையில் இன்று இலங்கையை வந்தடைந்த மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்கை, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.
இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

