இலங்கையில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடமொன்றுக்கு 3000 தொடக்கம் 3500 இற்கு இடைப்பட்ட புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களில் அடையாளம் காணப்பட்ட மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
20 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் மார்பகப் புற்றுநோய் தொடர்பாக ஆரம்பகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது அதனை முற்றாக நிவர்த்திக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

