மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதி முன்கூட்டிய வாக்களிப்பு

மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதி முன்கூட்டிய வாக்களிப்பு

மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு இப்போது நடக்கிறது. மார்ச் 24, வெள்ளிக்கி‌ழமை முதல் மார்ச் 27 திங்கள்வரை மதியம் 12:00 மணிமுதல் இரவு 8:00 வரை வாக்களிக்க முடியும்.

கொச்சவேடிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதிக்கும், லிபரல் கட்சியின் மேரி இங்க்கிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பல்வேறு தமிழர் அமைப்புக்கள் ஒற்றுமையுடன் ராகவன் பரஞ்சோதிக்கான வெற்றி வாய்ப்பை கொண்டுவர கடும் பிரயத்தனம் செய்துவருவதை காணக்கூயதாக இருக்கிறது.

முற்கூட்டிய வாக்களிப்பின்போதே தமிழ் மக்களை பெருமளவில் வாக்களிக்க வைத்து தமிழராக ராகவனின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் ராகவன் பரஞ்சோதியின் ஆதரவாளர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் ராகவன் பரஞ்சோதி வெற்றி பெறும்போது, அந்தச் செய்தி “தமிழரின் ஒற்றுமையை கனடாவின் அனைத்துக் கட்சிகளுக்கும் உரத்துக்கூறுவதாக அமையும்.

கூடவே தமிழரின் பிரதிநிதித்துவம் ஒட்டாவில் மேலும் அதிகரிக்கும்.” என்று ராகவன் பரஞ்சோதியின் தேர்தல் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.

 

ragavanparanchothycampaign_01

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *