மார்க்கம் – தோன்ஹில் லிபரல் வேட்பாளர் விலகல்!
ஒன்ராறியோ-இடைத்தேர்தல் லிபரல் போட்டியாளர் ஒருவர் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார். சண்டை ஒன்றின் காரணமாக இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவின் உதவியாளர் ஒருவருக்கு சாதகமாக இப்போட்டி ஏற்படுத்தப்பட்டதாக இவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையிடம் தனது மேன்முறையீட்டை தெரிவிக்க எடுத்த முயற்சிகள் செவிடர் காதில் விழுந்ததால் ரொறொன்ரோ-பிரதேச மார்க்கம் தோன்ஹில் தொகுதிக்கான நியமனத்திற்கு தான் முயற்சிக்க போவதில்லை என Juanita Nathan அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மார்க்கம்-தோன்ஹில் தொகுதி நியமனத்திற்கான செயல் முறைகள் வெளிப்படையற்றதும் நியாயமற்றதும் ஆகையால் தன்னால் அதிலுள்ள செயல் முறைகளை மதிப்பிட முடியவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எனக்கு வேறு வழியில்லை ஆனால் போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன் என கூறியுள்ளார்.
ட்ரூடோவின் மூத்த ஊழியர்களில் ஒருவரான மேரி இங்கிற்கெதிராக போட்டியிடுகின்றார்.
இந்த வார ஆரம்பத்தில் புதிய கட்சி அங்கத்தவர்களிற்கான வேட்பு மனு வாக்கெடுப்பு பதிவிற்கான இறுதி நாள் குறித்து முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
குடிவரவு அமைச்சர் ஜோன் மக்லும் சீனாவிற்கான தூதுவராக நியமனம் பெற்றதனால் இத்தொகுதி வெற்றிடமானது.
நாதனின் வெளியேற்றத்தை தொடர்ந்து மூன்று போட்டியாளர்கள் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வர்.
இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 3ந் திகதி இடம்பெறும்.