நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அண்ணா தி.மு.க.வின் சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
தமிழில் பதவியேற்பு
இந்த நிலையில், வெற்றிடங்களுக்கான தோ்தல் முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது.
அதில் தி.மு.க., அண்ணா தி.மு.க. சார்பில் முன்னுறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தோ்வாகினர்.
இதில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்படி, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. மாநிலங்கள் அவை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்க அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து கமல்ஹாசன் மாநிலங்கள் அவை உறுப்பினராக தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அவருக்கு ராஜ்யசபை தலைவர் ஹர்வன்ஷ் பதவி பிரமானம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.