புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்தை ரயில் பாதையின் முதலாவது கட்ட நடவடிக்கைகள் இன்று காலை 10.00 மணிக்கு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.
முதலாவது பயணிக்கும் ரயில் பயணத்தை, சிவில் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மாத்தறை முதல் கதிர்காமம் வரையில் மூன்று கட்டங்களாக ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் முதல் கட்டமாக 26 கிலோமீற்றர் தூர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் பகுதியே நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.