மாத்தறையில் சற்று முன்னர் வேன் மற்றும் பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தம்புள்ளை, மாத்தளை வீதியின் பன்னம்பிட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் 5 சிறுமிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.